உள்ளூர் செய்திகள்

மனிதர்களைத் தாக்கிய பழமையான வைரஸ்

மற்ற உயிரினங்களைப்போல் மனிதர்களைத் தாக்கும் வைரஸ்களுக்கும் ஒரு பரிணாம வரலாறு இருந்திருக்க வேண்டும். நீண்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகும்கூட துரதிர்ஷ்டவசமாக தொல்மனிதப் படிமங்களில் இருந்து வைரஸ்களின் எச்சங்கள் மீட்டெடுக்கப்படவில்லை. சுமார் 450 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மனித உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட வைரஸ்தான், இதுவரை மனிதர்களைத் தாக்கிய வைரஸ்களிலேயே பழமையான ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது.திருப்பம்மத்திய மற்றும் மேற்கு யுரேஷியப் பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட 300 மனித உடல் எச்சங்கள் சமீபத்தில் ஆராயப்பட்டன. அவை 200 முதல் 7 ஆயிரம் ஆண்டுகள் வரை பழமையானவை. ஜெர்மனியின் ஆஸ்டர்ஹோஃபன் பகுதியில் வாழ்ந்த தாமிரக் காலக்கட்டத்தைச் சேர்ந்த மனிதனின் எலும்பில் இருந்து ஹெபடைட்டிஸ் பி (hepatitis B) என்ற வைரஸின் மரபணுக்கள் கிடைத்தன. சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அந்த மனிதனின் உடலில் இருந்து கிடைத்துள்ள இந்த வைரஸின் பண்புகள் தற்கால ஹெபடைட்டிஸ் பி வைரஸோடு ஒப்பிடப்பட்டன. இரண்டிற்கும் இடையில் பல வேறுபாடுகள் தென்பட்டன. ஆகவே, அம்மனிதனின் உடலில் இருந்து கிடைத்தஹெபடைட்டிஸ் பி வைரஸ் அழிந்துபோன வைரஸ் வகையைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற முடிவிற்கு ஆராய்ச்சியாளர்கள் வந்தனர். இவை இரண்டிற்கும் இடையில் இருக்கும் ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை அறிவதன் மூலம், வைரஸ்களின் பரிணாம வளர்ச்சி பற்றி பல உண்மைகள் வெளிப்படும் என்று நம்பப்படுகிறது.- கௌரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !