உள்ளூர் செய்திகள்

இடி தாங்கும் பலசாலி

மேகங்கள் உராய்வதால் ஏற்படும் வெப்பம் காரணமாக வானத்தில் மின்சாரம் உண்டாகி பூமியில் பாயும்போது இடி, மின்னல் உண்டாகிறது. இடி, மின்னல் இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும், ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 3 லட்சம் கி.மீ. என்பதால், மின்னல் முதலில் நம் கண்ணுக்குத் தெரியும். ஒலியின் வேகம் ஒரு நொடிக்கு 330 மீட்டர் மட்டுமே! இடி, மின்னல் காரணமாக உருவாகும் மின்சாரம் பூமியை நோக்கி வரும்போது உயரமான கட்டடங்கள், உயரமான மரங்கள் போன்றவற்றின் மீது முதலில் பாய்கிறது. இதனால் கட்டடங்கள், மரங்கள் சேதமடைகின்றன. இடி உருவாகும் விதம்* பூமியில் இருந்து ஈரக்காற்று மேலே எழும்புகிறது.* ஈரக்காற்று குளிர்ச்சி அடைந்து நீர்த்துளிகள் உருவாகின்றன.* நீர்த்துளிகள் மேகமாக மாறி, ஏற்கனவே இருக்கும் மேகங்களுடன் உராய்கிறது.* மேகங்கள் உராயும்போது 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டிகிரி சென்டிகிரேடு வரை வெப்பம் உருவாகும்* இந்த வெப்பத்தினால் அந்தப் பகுதி விரிவடைந்து மின்னல் வெளிச்சமும், இடிச் சத்தமும் ஏற்படும்.இடிதாங்கி (Lightning Rod) உயரமான கட்டடங்களின் உச்சியில், கூர் முனை உள்ள ஒரு தடித்த கம்பி பொருத்தப்படுகிறது. அதுதான் இடிதாங்கி. அந்தக் கம்பி பூமி வரை இழுக்கப்பட்டு, பூமியினுள் புதைக்கப்படும். இதற்கு, Earthing - எர்த்திங் என்று பெயர். தமிழில் புவித்தொடுப்பு அல்லது தரையிணைப்பு எனக் குறிப்பிடப்படுகிறது. இப்படிச் செய்வதன் மூலம் கட்டடத்தின் மேல் இடி / மின்னல் விழும்போது, அதிலுள்ள மின்சாரம், இடிதாங்கி மூலம், பூமிக்கு அனுப்பப்படுகிறது. இதனால் கட்டடம் பாதிப்பில் இருந்து காப்பாற்றப்படுகிறது.100 லட்சம் கிலோவாட்ஸ் (Kilowatts)மேகங்கள் வேகமாக மோதிக் கொள்ளும் போது ஏற்படும் மின்சக்தி1 கிலோவாட்ஸ் = 5 மணி நேரம் ஒரு குளிர்சாதனப் பெட்டி இயங்கத் தேவையான மின்சாரம்இடி தாங்கியைக் கண்டுபிடித்தவர் 'பெஞ்சமின் ஃபிராங்க்ளின்'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !