அக்டோபர் 15 முதல் 31 வரை வானில் என்ன தெரியும்?
எந்தக் கருவியும் இல்லாமல், வெறும் கண்களால் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கோள்களை நம்மால் காண முடியும்! lஅக்.15: அதிகாலை சூரியன் உதிக்கும் முன், 5.30 மணிக்கு வியாழன் கோள் அடிவானில் இருந்து, 6 டிகிரி உயரத்தில் இருக்கும். அதற்கு அடுத்தடுத்த நாட்களில், அதே நேரத்தில் அடிவானில் இருந்து அது இருக்கும் உயரம் சிறிதுசிறிதாக அதிகரித்து வரும். (படம்: 2). lவெள்ளி, சனி, செவ்வாய் ஆகிய கோள்களை மாலையில் சூரியன் மறைந்த பின், இருள் சூழும் நேரத்தில் மேற்கு வானில் காண முடியும். (படம்: 1). lஅக்.15 அன்று, ெவள்ளிக் கோள் தோராயமாக 17 டிகிரி உயரத்தில் இருக்கும். (படம்: 1). இதன் உயரம் அடுத்தடுத்த நாட்களில் சிறிதுசிறிதாக அதிகரிக்கும்.lஅக். 15 அன்று, சனிக் கோள் ஏறக்குறைய 23 டிகிரி உயரத்தில் இருக்கும். (படம்: 1). அடுத்தடுத்த நாட்களில் அடிவானில் இருந்து அது இருக்கும் உயரம் சிறிதுசிறிதாகக் குறையும். *அக். 15 முதல் அக். 31 வரை, செவ்வாய் கோள் ஏறக்குறைய 48 டிகிரியில் தெரியும். இது தோன்றும் இடத்தின் மாற்றம் குறைவுதான். (படம்:1)