உள்ளூர் செய்திகள்

கோடை விடுமுறைக்கு எங்க போறீங்க?

கோடை விடுமுறைக்கு சுற்றுலா போக விரும்புகிறீர்களா? உறவினர் வீட்டுக்குப் போக விரும்புகிறீர்களா? என்ற கேள்வியை குரோம்பேட்டை எஸ்.சி.எஸ். மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் கேட்டவுடன் பொரிந்து தள்ளிவிட்டார்கள். கலையரசி: உறவினர் வீடுதான் என்னோட சாய்ஸ். பாட்டி, முறுக்கு எல்லாம் சுட்டுக்கொடுப்பாங்க. தாத்தா, அவங்க வாழ்க்கை அனுபவங்களை எல்லாம் பேசுவார். அது நமது வாழ்க்கைக்கு ரொம்பவும் உபயோகமாக இருக்கும். சொந்த ஊர்ல உறவினர் வீட்டுல கிடைக்கிற சந்தோஷம், நிச்சயம் சுற்றுலாவுல கிடைக்காது.திவ்யா: சொந்தக்காரங்க வீட்டுக்கு எப்ப வேணாலும் போகலாம். இந்த ஸ்டூடன்ஸ் லைஃப்ல தினம் தினம் படிப்பு, பள்ளி, டியூஷன்னு ஓடிக்கிட்டே இருக்கோம். ஒருமாசம் சேந்தாப்போல கிடைக்கிற விடுமுறையையும், சொந்தக்காரங்க வீட்டுல போய்த்தான் செலவழிக்கணுமா? கோடை விடுமுறைல, சுற்றுலா தலங்களுக்குத்தான் போகணும். அங்கே கிடைக்கிற அனுபவங்கள் அலாதியானது.நவீன்: உறவினர் வீட்டுக்கு போய்வந்தா... சொந்தக்காரங்ககிட்ட நல்ல உறவை வளர்த்துக்கொள்ள முடியும். சுற்றுலாவுல போய் கண்டதையும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கத்தான் வேண்டியிருக்கும். கிராமத்து உறவினர் வீட்டுக்குப்போனால், நல்ல ஆரோக்கியமான உணவு சாப்பிடலாம். உறவினர் பசங்களோட விளையாடவும் முடியும்.நிவேதாஸ்ரீ: கோடை விடுமுறைன்னாலே, சுற்றுலாவுக்குத்தான் மனசு ஏங்குது. நிறைய பயணம் செய்யலாம். விதவிதமான உணவுகள், வேறு கலாசார, மொழி மக்கள்ணு பார்க்கலாம். நிறைய இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசிக்கலாம். செம ஜாலியா இருக்கும்.கலை: ஸ்கூலில் இருந்தே சுற்றுலா கூட்டிக்கிட்டுப் போறாங்களே? கோடை விடுமுறையிலும் ஏன் இன்னொரு சுற்றுலா போகணும்? காலாண்டு விடுமுறையிலேயோ, அரையாண்டு விடுமுறையிலேயோ சுற்றுலா போங்க. கோடை விடுமுறையில் உறவினர் வீட்டுக்குப் போங்களேன்.திவ்யா: ஏன் காலாண்டு, அரையாண்டு விடுமுறையில் உறவினர் வீட்டுக்குப் போகக்கூடாதா? கோடை விடுமுறையில்தான் ஒருமாசம் லீவு கிடைக்குது. அப்போ சுற்றுலா போனாத்தான் ஜாலியாக இருக்கும். நல்லா என்ஜாய் பண்ணமுடியும்.நவீன்: உறவினர் வீட்டுக்குப் போங்க. அவங்களோடு சேர்ந்து பழகுங்க. இன்னிக்கு நிறையப் பேருக்கு சொந்தக்காரங்களோட உறவு முறைகூட தெரியறதில்ல. என்ன சொல்லி கூப்பிடுறதுண்ணு தெரியல. ஏன்... இப்படி, சொந்தக்காரங்க வீட்டுக்குப் போறதையே மறந்துட்டதால ஏற்பட்டது.நிவேதாஸ்ரீ: அப்படி யாரும் சொந்தக்காரங்க உறவுமுறை தெரியாமல் எல்லாம் இல்லை. உறவினர் வேணாம்ணு சொல்லவே இல்லை. கிடைக்கிற ஒரு கோடை விடுமுறையில், ஜாலியா சுற்றுலா போகலாமேணு சொல்றேன்.கலை: சொந்தக்காரங்க வீட்டுக்குப் போனால், எல்லோரிடமும் கலந்து பழக முடியும். ஊரில் இருப்பவர்களில் கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்கலாம். மாடியில நிலாச்சோறு சாப்பிடலாம். இதெல்லாம் இங்கே கிடைக்குமா?திவ்யா: ஏன் இங்கே நிலாச்சோறு சாப்பிட முடியாதா? இங்கேயும் மொட்டைமாடி இருக்கத்தானே செய்யுது. ஆனா, ஊட்டியோ, கொடைக்கானலோ, குற்றாலமோ இங்கே இருக்குதா? அதைக்கொண்டு வர முடியுமா? முடியாதே!நவீன்: நம்ம வீட்டுல இருந்து நாலுபேர் மட்டும் சுற்றுலா போறது நல்லாவா இருக்கும்? அத்தை, மாமா, பெரியப்பா, சித்தப்பான்னு எல்லா உறவினர்களும் ஒண்ணா சேர்ந்து அதே சுற்றுலா போனால் எவ்வளவு ஜாலியா இருக்கும். நிவேதாஸ்ரீ: நம்ம அம்மா அப்பாவோட போகும்போது, கொஞ்சம் சுதந்திரம் இருக்கும். ஆனா, சொந்தக்காரங்களைக் கூட்டிக்கிட்டு போனா, எப்பவும் யாராவது, எச்சரிக்கை கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. அதனால நம்ம சுதந்திரம் பறி போயிடும்.நவீன்: பெரியவங்க அறிவுரை சொன்னா, அது நம்மளோட நல்லதுக்குத்தான். அதை தப்பா புரிஞ்சுக்கக்கூடாது.கலை: ஆமா... அதோட கிராமத்துல திருவிழா நடக்கும். வயக்காடு, பசுமாடு எல்லாம் பார்க்கலாம். விவசாயம் எப்படி நடக்குதுன்னு பக்கத்தில் இருந்து பார்த்துக்கிடலாம். நகரத்துல பார்க்க முடியாத எத்தனையோ விஷயங்கள, நம்ம ஊர்களில்தான் பார்க்க முடியும். திவ்யா: அதே மாதிரி, சுற்றுலாவிலேயும் நிறைய பார்த்து கத்துக்க முடியும். மகாபலிபுரம் சுற்றுலா போனால், பல்லவர் கால ஆட்சிக்கான சான்று பார்க்கலாம். பாடப்புத்தகங்களில் படிக்கக்கூடிய பல இடங்களுக்கு, சுற்றுலா போயிட்டு வரலாம். அதுபற்றி, பள்ளிக்கு வந்து கட்டுரை எழுதலாம்.நிவேதாஸ்ரீ: கொடைக்கானல் மாதிரியான இயற்கைக்காட்சி இடங்களுக்கு சுற்றுலா போனால், அதை ரசிச்சு, செல்ஃபி எடுத்துக்கிடலாம். அந்த போட்டோவை ஃபேஸ்புக்கில் போட்டால் லைக்ஸ் அள்ளும் தெரியுமா?நவீன்: கிராமத்தையும், ஊர்த்திருவிழாவையும் படம் பிடிச்சுப்போட்டாலும் லைக்ஸ் அள்ளும்.திவ்யா: டாப்பிக் மாறி போகாதீங்கப்பா... சுற்றுலாவுல நிறைய கத்துக்க முடியும்; நல்ல சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். இப்படி எத்தனையோ இருக்கு.கலை: சுத்தமான காற்று, சொந்தக்காரங்க இருக்கிற ஊர்ல கிடைக்காதா? கிராமங்களில் கத்துக்க எதுவுமே இல்லையா? நாம சாப்பிடுற உணவு எல்லாம் கிராமத்துல இருந்துதான் கிடைக்குது. அங்கேயும் கத்துக்கிறதுக்கு விஷயங்கள் இருக்கத்தான் செய்யுது. அதை கத்துக்க நமக்கு மனசு வேணும். கிராமத்தைப் பத்தியும், அங்கே நடக்கற ஊர்த் திருவிழாவைப் பத்தியும் கூட கட்டுரை எழுதிக் கொடுக்கலாம். மிஸ் அதுக்கும்தான் மார்க் போடுவாங்க. திவ்யா: அப்போ என்னதான் முடிவு?கலை: கோடை விடுமுறையில் சுற்றுலா தேவை. உறவினர் வீட்டுக்கோ, சுற்றுலா தலமாகவோ இருக்கட்டும். எங்கே போனாலும், புதுசா ஏதாவது நாலு நல்ல விஷயத்தை கற்றுக்கொண்டுவந்து கட்டுரை எழுதி, நல்ல பேர் வாங்கணும். என்ன ஓக்கேயா?மற்ற மூவரும் கோரஸாக ”ஓக்கேய்ய்ய்ய்” என்று ஆமோதித்தனர்.சத்தியசீலன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !