உள்ளூர் செய்திகள்

தேசிய கொடியை ஏற்றுவாரா தோனி?

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தின்போது, இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, லடாக்கில் உள்ள லே பகுதியில் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவார் என செய்தி வெளியாகியுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்ததும், இந்திய இராணுவத்தில் இரண்டு மாதங்கள் பயிற்சி செய்ய விரும்பினார் தோனி. அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இராணுவப் பயிற்சியில் இருக்கிறார்.இந்திய இராணுவத்தின் தூதுவர் என்ற பெருமையும் தோனிக்கு உண்டு. 2011ஆம் ஆண்டு முதல் இந்திய இராணுவ பாரசூட் ரெஜிமெண்டில் லெப்டினெனட் என்ற பதவியில் இருந்து வருகிறார். மேலும், பலமுறை இராணுவப் பயிற்சி முகாம்களில் தன்னை இணைத்துக்கொண்டு பயிற்சிகளும் செய்து வருகிறார். சமீபத்தில்தான் லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், யூனியன் பிரதேசமாக லடாக்கின் முதல் சுதந்திர தினம் என்று இந்த ஆகஸ்ட் 15ஐ சொல்லலாம். அதில், தோனி கொடியேற்றுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !