உலக மல்யுத்தப் போட்டிகள்!
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி, கஜகஸ்தானில் உள்ள நூர் சுல்தானில் செப்டம்பர் 14 முதல் 22 வரை நடக்கிறது. இதில் ஆண்களுக்கு ப்ரீஸ்டைல் மற்றும் கிரிகோ ரோமன் பிரிவுகளிலும், பெண்களுக்கு ப்ரீஸ்டைல் பிரிவிலும் பந்தயங்கள் நடைபெறுகின்றன. மொத்தம் 30 எடைப் பிரிவுகளில் போட்டி நடைபெறும்.இந்த போட்டியில் முதல் 6 இடத்தைப் பிடிப்பவர்கள், அடுத்த ஆண்டு (2020) டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்களது இடத்தை உறுதி செய்ய முடியும். ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிச் சுற்றாக அமைந்து இருப்பதால், அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய மல்யுத்த அணியில் 20 வீரர்களும், 10 வீராங்கனைகளும் இடம் பிடித்துள்ளனர்.