உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / பனி மூடிய கேளம்பாக்கம் காயலில் பறவைகள் உற்சாகம்..

பனி மூடிய கேளம்பாக்கம் காயலில் பறவைகள் உற்சாகம்..

பறவைகள் வந்து செல்லும் ஒரு இடமான சென்னை பக்கம் உள்ள கேளம்பாக்கம் காயல் பகுதியில் கடந்த சில நாட்களாக அதிகாலை பனி மூட்டம் காரணமாக ரம்மியமான சூழ்நிலை நிலவுகிறது.கடற்கரைக்கு பக்கத்தில் நீர் நிலப்பரப்பு நிறைந்து காணப்படுவதே காயலாகும்.தமிழகத்திற்கு வலசை வரும் அரிய வகை பறவைகள் சென்னையின் சுற்றுப்புறத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம்,பழவேற்காடு ஏரி,கேளம்பாக்கம் காயல் பகுதிகளில் முகாமிட்டுள்ளது.இதில் கோவளம்-கேளாம்பாக்கம் இணைப்பு சாலையில் கோவளம் பக்கத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் துாரம் சென்றதும் ஒரு உடைந்த பாலம் தென்படும். இந்த இடத்தில் தேங்கியுள்ள நீரில் ஏாரளமான மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன.மீன்கள் இருந்தாலே பறவைகளுக்கு கொண்டாட்டம்தானே..ஆகவே பெலிகன் எனப்படும் கூழைக்கடா,சீகல் எனப்படும் கடல் புறா,ஹெரன் எனப்படும் பச்சை நிற கொக்கு,செங்கால் நாரை ஆகிய பறவைகள் முகாமிட்டுள்ளன இவைகளுடன் உள்ளூர் கொக்குகளும்,நீர் காகங்களும் சேர்ந்து காயலில் உள்ள மீன்களை வேட்டையாடி உண்கின்றன.இங்கு சில மீனவர்கள் வலை வீசியும்,சிறிய ரக படகுகளில் பயணம் செய்தும் மீன்கள்,நண்டு,ஏரா போன்ற கடல் வாழ் உயிரினங்களை பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக காலை 8 மணி வரையிலும் கூட மூடுபனி நிலவுகிறது.இதனால் இந்தப்பகுதியில் முகாமிட்டுள்ள பறவைகள் இந்த ரம்மியமான மூடுபனியினுடே நீரில் நீந்தியபடி தமக்கான உணவை தேடுகின்றன.பல பறவைகள் நன்றாக வெளிச்சம் பரவட்டும் பனி நீங்கட்டும் என்பது போல காத்திருக்கின்றன.இது எல்லாமே கேமரா கண்களால் காண்பதற்கு சுவராசியமான காட்சியாகும்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை