UPDATED : ஜூலை 19, 2025 08:02 PM | ADDED : ஜூலை 19, 2025 08:00 PM
ஆடி கிருத்திகை - முருகப்பெருமான் பக்தர்களுக்கு மிகவும் உகந்த நாளாகும்.இந்நாளில் வேல் சமேத சுப்ரமணியர் வழிபாடு பெரிதும் சிறப்பிக்கப்படுகிறது. புனித வேலின் அருள், பக்தர்களின் மனத்தில் உள்ள பயம், அறியாமை, தடைகளை அழிக்கிறது என்று நம்பப்படுகிறது.லண்டன் மேனார் பார்க் பகுதியில் உள்ள ஸ்ரீ சிவகாமி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், அங்கு வாழும் தமிழர்களுக்கு ஆன்மிக ஒளியை பரப்பும் புனிதத் தலமாக விளங்குகிறது.இங்கே நடைபெறும் ஒவ்வொரு திருவிழாவும் பக்தர்களை இந்தியக் கோவிலின் ஆன்மிகச் சூழலை நினைவூட்டுகிறது.வாத்திய இசைகள் முழங்க முருகனின் பாடல்கள் ஒங்கி ஒலிக்க நேற்று சுப்ரமணிய சுவாமிக்கு பால், தேன், சந்தனக் காப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.பக்தர்கள் 'வேல் வேல் முருகா!' என்ற கோஷத்துடன் திரண்டனர்.அங்குள்ள அர்ச்சகர்களால் ஆறுபடை வீடு முருகன் வழிபாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி விரிவான உபதேசம் நடத்தப்பட்டது.பல குடும்பங்கள் பாரம்பரிய ஆடை அணிந்து வந்து, சுப்ரமணியரின் கருணையை வேண்டி வழிபட்டனர்.கோவில் வளாகம் மலர் அலங்காரம் மற்றும் வண்ணமயமான விளக்குகளால் அழகுபடுத்தப்பட்டிருந்தது.சுவாமிக்கு அன்னதானம், பால் பாயசம், பனீர் போன்ற நெய்வேத்யங்கள் அர்ப்பணிக்கப்பட்டது.லண்டன் ஸ்ரீ சிவஹாமி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற இந்த ஆடிக்கிருத்திகை விழா மட்டுமல்ல அங்குள்ள தமிழர்களை ஒன்றுபடுத்தும் ஆன்மீக நிகழ்வும் கூட.எங்கு இருந்த போதும் அந்த கந்தனின் கருணை நமக்கு உண்டு என்பதை உணர்த்திய உணர்ந்த இனிய நாளாக வந்திருந்த பக்தர்களுக்கு இந்த நாள் அமைந்திருந்தது.படங்கள்:ஆர்.செந்தில்குமார்.