உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே

ஆற்றில் கால் நனைத்து நடந்து சென்றது,வீட்டில் புதிதாய் சமைத்தது,நண்பர்களுடன் பச்சைக்குதிரை தாண்டி விளையாடியது,மரங்களில் தொட்டிகட்டி குழந்தைகளை துாங்கவைத்தது என்று நாம் கடந்து வந்த பல காட்சிகளை மீண்டும் ஞாபகப்படுத்துகிறது சென்னை எக்மோரில் நடந்துவரும் ஒவிய மற்றும் சிற்ப கண்காட்சி.கலை பண்பாட்டு துறை சார்பில் மூத்த ஒவியர்கள் மற்றும் ஓவியக்கல்லுாரி மாணவர்கள் வரைந்த இந்த ஓவிய கண்காட்சியில் பிரம்மாண்டமாக வரையப்பட்டுள்ள அழகர் ஆற்றில் எழுந்தருளும் ஓவியம் பலரையும் கவர்ந்துள்ளது. இந்த ஓவியத்தை ஒரு வருடமாக ஓவியர் வரைந்துள்ளார் ஒவியத்திற்கான பிரேமில் கூட பெருமாளின் பல படங்களை இடம் பெறச்செய்துள்ளார்.இதே போல குழந்தை சிரிக்கும் ஓவியமும் தனிக்கவனம் பெறுகிறது.நேற்று துவங்கிய இந்த ஓவிய கண்காட்சி இன்னும் 10 நாட்கள் நடைபெறுகிறது.படங்கள்:லட்சுமணன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
ஜூலை 11, 2025 17:55

நன்றி அய்யா. வாசகர்களுக்கு பயன்படும். ஆனால் இடமும் நேரமும் இந்த செய்தியில் இடம் பெறவில்லையே