UPDATED : டிச 09, 2024 03:10 PM | ADDED : டிச 09, 2024 03:07 PM
வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பிலான பாரதி பிறந்த தினவிழாவினை முன்னிட்டு இரண்டாம் நாளான நேற்று சென்னை எத்திராஜ் மகளிர் கல்லுாரியில் பல்வேறு மாநில கலாச்சார நாட்டிய விழா நடைபெற்றது.
தமிழகத்தின் பரதம்,கேரளாவின் மோகினியாட்டம்,ஆந்திராவின் குச்சிப்பிடி,ஒடிசாவின் ஒடிசி,உ.பி.,யின் கதக் ஆகிய நடனங்கள் நிகழ்த்தப்பட்டன.பல நாட்டியங்கள் பாரதியின் பாடல்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அதிலும் பாரதியின் ஆசை முகம் மறந்து போச்சா? என்ற பாடலுக்கு கதக் நடனத்தை வடிவமைத்திருந்தது பாராட்டத்தக்கதாக இருந்தது,அதே போல ஆந்திராவின் பிரபலமான குச்சிப்புடி நடனத்தை தாம்பளத்தட்டில் நின்றபடி ஆடியவர்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தனர்.
முன்னதாக பஷீர் அகமது கல்லுாரி மாணவியர் 150 பேர் புதிய ஆத்திச்சூடி எழுதப்பட்ட பாததைகளை ஊர்வலமாக கொண்டு வந்து மேடையேற்றி சிறப்பித்தனர்.