துபாயில் நடைபெற உள்ள சர்வதேச கூடைப்பந்தாட்டப் போட்டியின் தகுதிச் சுற்று பல்வேறு மாநில தலைநகர்களில் நடந்துவருகிறது.சென்னையில் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது.முதல் போட்டியில் இந்தியாவும்-கத்தார் அணிகளும் மோதின
போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக நடைபெற்ற பயிற்சியில் களம் இறங்கிய இந்திய வீரர்களின் உயரத்தைப் பார்த்த போது, இவர்களை வெல்ல யார் இருக்கப் போகிறார்கள்? என்றே தோன்றியது ஆனால் களத்தில் விளையாடிய போது சுறுசுறுப்பின்றி, குழு மனப்பான்மையின்றி விளையாடியதால் பரிதாபமாக கத்தார் அணியுடன் தோற்றனர்.
ஆட்டத்தின் பிற்பாதியில் உயரம் குறைவாக இருந்த முத்துகிருஷ்ணன்,பழநி ஆகியோரை களத்தில் இறக்கியபோதுதான் இந்திய அணியின் ஸ்கோர் கவுரமாக உயர்ந்தது,பிரின்ஸ் என்ற ஒல்லியான பாவமாக பார்க்கப்பட்ட வீரர்தான் அதிகம் ஸகோர் செய்திருந்தார்,ஆள் பார்த்து எடை போடக்கூடாது என்பது இவர்களது விஷயத்தில் தெளிவு.
அரஙகம் மாணவர்களால் நிரம்பிவழிந்தது ஆனால் அதிலும் ஒரு குறையாக வந்திருந்த மாணவர்கள் அனைவருமே தனியார் பள்ளி மாணவர்கள் அவர்களுக்கு சிற்றுண்டி கொடுத்து, இந்தியா பெயர் எழுதிய பனியன் கொடுத்து, பஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுத்து அழைத்து வந்திருந்தனர். நம் மாநகராட்சி அரசுப்பள்ளி நிர்வாகம் இதை ஏன் செய்வதில்லை அரசுப்பள்ளி மாணவர்கள் இது போன்ற விளயைாடடுப் போட்டிகளை பார்த்தால்தானே அவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் ஏற்படும்.
போட்டிகளை கீர்த்தனா என்பவர் தனது உற்சாகமான குரலால் வழிநடத்திச் சென்றார் இடைவெளி நேரத்தில் கூடைப்பந்தை வைத்து ஆடிய நடனமும் சிறப்பாக இருந்தது.இந்த ஆட்டத்தில் கத்தார் அணியுடன் விளையாடி தோற்றதன் மூலம் இந்தியா சந்தித்த மூன்றாவது தோல்வியாகும், கிரிக்கெட்டைத் தவிர வேறு விளையாட்டில் நமது கவனத்தை இன்னும் சிறப்பாக செலுத்த வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.-எல்.முருகராஜ்.