UPDATED : செப் 08, 2025 07:33 PM | ADDED : செப் 08, 2025 07:27 PM
ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழாவில் அதிகாரிகளின் அணிவகுப்பு மற்றும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யு.பி.எஸ்.சி.,எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு,ராணுவ அகாடமியில் பயிற்சி வழங்கப்படுகிறது. மாதங்களாக நடந்த ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா சென்னையில் நடந்தது.இதில் ஆண்,பெண் அதிகாரிகள் கலந்து கொண்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.எரியும் தீ வளையத்தினுள் மோட்டார் சைக்கிளில் பாய்வது,களரி வித்தையில் ஈடுபட்டது,எரியும் செங்கலை உடைத்தது என பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டு மெய்சிலிர்க்க வைத்தனர்.படங்கள்:ராம்கிஷன்.