உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / அடித்து நொறுக்கிய நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி

அடித்து நொறுக்கிய நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி

2025 மார்ச் 3ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஅ) கால்பந்து போட்டியில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சென்னையின் எஃப்.சி. அணியை 3--0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.போட்டியின் தொடக்கத்தில் இருந்தே நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி தாக்குதலை அதிகரித்தது.15வது நிமிடத்தில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் முன்னணி வீரர் ஷில்டன் சில்வா முதல் கோலை அடித்தார்.30வது நிமிடத்தில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் நடுப்பகுதி வீரர் ஃபிரான்சிஸ்கோ கோல் அடித்து, அணியின் முன்னிலை 2--0 ஆக உயர்த்தினார்., நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் மாற்று வீரர் அனிருத் தாபா ஒரு திடீர் தாக்குதலில் மூன்றாவது கோலை அடித்து, அணியின் முன்னிலை 3--0 ஆக உயர்த்தினார்.இப்படி முதல் பாதியிலேயே நார்த் ஈஸ்ட் அணியானது மூன்று கோல்கள் போட்டு வலுவான நிலையில் இருந்தது,வலுவான நிலையில் இருந்ததால் நார்த் ஈஸ்ட் அணி இரண்டாவது பாதியில் தடுப்பு ஆட்டத்தை மட்டுமே மேற்கொண்டது.சென்னை அணிக்கு உள்ளூர் பார்வையாளர்கள் நிறைய ஊக்கம் கொடுத்தாலும் அவர்களால் ஒரு கோல் கூட போடமுடியவில்லை அவர்களுக்கு அது தர்ம சங்கடமாகவே இருந்தது.பயிற்சியாளர் கருத்து:நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் பயிற்சியாளர், 'அணியின் ஒருங்கிணைந்த ஆட்டம் மற்றும் வீரர்களின் முயற்சி வெற்றிக்கு காரணம்' என்று தெரிவித்தார்.சென்னையின் எஃப்.சி. அணியின் பயிற்சியாளர், 'இந்த தோல்வி நிச்சயமாக ஏமாற்றம் அளிக்கிறது, ஆனால் இது அணியின் வளர்ச்சிக்கு ஒரு பாடமாக இருக்கும்' என்று கூறினார்.இந்த வெற்றி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் பிளேஆஃப் வாய்ப்புகளை அதிகரித்துள்ளது, மேலும் சென்னையின் எஃப்.சி. அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.போட்டி ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இருந்தது போட்டியைக் காண நிறைய சிறுவர்கள் மைதானதிற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர் ஆனால் அவர்களிடம் குறைந்த பட்ச டிக்கெட் வாங்கக்கூட வசதி இல்லாததால் போட்டியைப் பார்க்க போகிறவர்களை நிறுத்தி அண்ணா..என்னையும் கூட்டிட்டு போகமுடியுமா? என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தனர்.இத்தனைக்கும் மைதானத்தினுள் பெரும்பாலான பார்வையாளர்கள் காலரி காலியாகவே இருந்தது ஆர்வமுள்ள மாணவர்களை இலவசமாக அனுமதித்தால்தானே அவர்கள் எதிர்காலத்தில் விளையாட்டு வீரர்களாக முடியும்.-எல்.முருகராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை