உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / காஞ்சியில் கோலாகலம்: புதிய இளைய மடாதிபதி பொறுப்பு ஏற்றார்

காஞ்சியில் கோலாகலம்: புதிய இளைய மடாதிபதி பொறுப்பு ஏற்றார்

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான காஞ்சி காமகோட்டி மடத்தில், 71வது இளைய மடாதிபதியாக ஸ்ரீ சத்ய சந்திரகேந்திர சரஸ்வதி சுவாமிகள் பதவியேற்றனர். இவருக்கு தற்போதைய பெரிய மடாதிபதியான ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை அளித்தார்.இந்த புனித நிகழ்வில் பங்கேற்க பக்தர்கள் அதிகாலை 4 மணி முதல் கமாட்சியம்மன் கோவில் குளம் அருகே திரண்டனர். அனைவரும் காணும் வகையில் நிகழ்வுகள் முறையாக நடைபெற்றன. இளைய மடாதிபதி தனது ஆபரணங்களை அகற்றிய பின், மலர் தூவலோடு குளத்தில் நீராடினார். பின்னர், பெரிய சங்கராசாரியார் அவருக்கு மடாதிபதிக்குரிய காவி உடையை அணிவித்தார்.பல்வேறு கோவில்களிலிருந்து பெறப்பட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இரு மடாதிபதிகளும் பக்தர்களுக்கு இணைந்து ஆசீர்வாதம் செய்தனர். புதிய பெயர் அறிவிக்கப்பட்ட வேளையில் பக்தர்கள் கைகொட்டும் கரகோஷத்தால் அந்த இடமே அதிர்ந்தது. வானவேடிக்கையும் அலங்காரங்களும் நிகழ்விற்கு கூடுதல் அழகு சேர்த்தது.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை