உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்திப்போமா / வயிறு நிறையும்... ஆனால், ஆயுள் சுருங்கிவிடும்!

வயிறு நிறையும்... ஆனால், ஆயுள் சுருங்கிவிடும்!

கல்கி கவியரசு

கட்டுரையாளர், ஒரு எழுத்தாளர். நீலகிரிமாவட்டம், வெலிங்டன் ராணுவ மையத்தில் உணவகம் நடத்துகிறார். பாரம்பரியஉணவு வகைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்.'மை ரெஸ்டாரன்ட் குரு' அமைப்பு சார்பில், 2022ம் ஆண்டின் சிறந்த பெண் ஆளுமைகளுக்கான உணவக விருதை பெற்றார்.சென்னையில் நடந்த, 'எண்ணித் துணிக' கலந்துரையாடலில் கவர்னர் ரவி, 120 பேரை கவுரவித்ததில், இவரும் ஒருவர். உயிர்களின் அடிப்படை தேவை உணவு. உணவுகளை சார்ந்தே, தங்களின் வாழ்விடங்களை உயிரினங்கள் அமைத்து கொள்கின்றன. வயிற்றை நிரப்ப உணவு எடுக்காமல், வைட்டமின், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்புகள் கலந்த சரிவிகித உணவு கலவை அவசியம்.ஆப்பிள், கொய்யா, வாழை, பச்சை பட்டாணி, பச்சைபயிறு, கருப்பு உளுந்து, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட நார்சத்து மிகுந்த உணவு; வெள்ளரி, புருக்கோலி போன்ற நீர்சத்து நிறைந்த உணவு எடுப்பதால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கிறது.உடலுக்கு கொழுப்பு அவசியம் என்பதால் இறைச்சியையும் எடுத்து கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு, 200 கிராம் இறைச்சி உட்கொண்டால், 300 கிராம் காய்கறி உணவும் அவசியம்.

ஆயுள் நிர்ணயிக்கும்

சரிவிகித ஊட்டச்சத்து உணவை உட்கொண்ட மூதாதையர்கள், 100 வயதை கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்தனர். தற்போதைய தலைமுறையினர், 50 வயதை தாண்டுவதற்கு மருந்துகளையும், மருத்துவமனைகளையும் நாடி செல்கின்றனர். முன்பு இருப்பிடங்களின் அருகிலேயே உணவுப் பொருட்கள் விளைவித்து அறுவடை செய்து பயன்படுத்திய காலம் மாறி, சந்தை, கடைகளில் வாங்கும் பழக்கமாகி உள்ளது.காய்கறிகளை வெட்டி வேக வைக்க, வெங்காயம் உரிக்க யாருக்கும் நேரம் இல்லை. இந்த சோம்பேறித்தனத்தை மூலதனமாக எடுத்து கொண்ட நிறுவனங்கள், பல்பொருள் அங்காடி மற்றும் ஆடம்பர மால்களில் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை காற்று புகாத பிரிட்ஜ்களில் அடைத்து வைத்து விற்பனை செய்கின்றன.உணவு பொருட்களில் உள்ள மருத்துவ குணம் சிதைக்கப்பட்டு செயற்கையான முறையில் அவை செறிவூட்டப்படுகின்றன. வெங்காயம், தக்காளி உள்ளிட்ட இயற்கை சார்ந்த உணவுகளும், இறைச்சி, கடல் உணவு வகைகள் கூட காற்று புகாத பிளாஸ்டிக் கவரில் அடைத்து பல நாட்கள் கழித்து விற்பனை செய்யப்படுகிறது.சொந்த மண்ணில், சொந்த ஊரில் விளைவித்த ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி உள்ளிட்டவை விவசாயிகள், விற்பனையாளர்களிடம் பெறுவதை தவிர்த்து விட்டு, பிளாஸ்டிக் கவருக்குள் அடைக்கப்பட்டவற்றை, சமைத்து உண்ணும் நிலைக்கு மாறி வருகின்றனர். தற்போது மக்களை கவரும் நோக்கில் செறிவூட்டப்பட்ட மற்றும் அதிக நிறமிகள் சேர்த்த உணவு பயன்படுத்தப்படுகிறது.

நோய் பாதிப்பு அதிகம்

பச்சை முட்டையில் உருவாக்கும் மையோனஸ், சாஸ் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கும் பீட்சா, சாண்ட்விச், பர்கர், ஷவர்மா போன்ற உணவுகளில், இளையோர் அளவு கடந்த ஈடுபாடு காட்டி உட்கொள்கின்றனர். இதனால் உடம்பில் தேவையற்ற கொழுப்புகள் தேங்கி உடல் பருமன், குழந்தையின்மை, நீர்கட்டி, தைராய்டு, மாரடைப்பு உட்பட பல வியாதிகளை விலை கொடுத்து வாங்கும் அவலம் ஏற்படுகிறது.கர்ப்பிணிகள் இந்த உணவுகளை உண்பதால், பிரசவ காலத்தில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்புகளை சந்திக்கின்றனர். அதிலும் பிறக்கும் குழந்தைகள் கூட, சிறுவயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். கண்ணில் கண்ட உணவுகளை வாங்கி, ருசிக்காக வயிற்றை நிரப்பும் கலாசாரத்தால், இன்று ஆரோக்கியமற்ற, சுகாதாரமற்ற சமுதாயத்தை நமது கண்முன்னே நாமே வடிவமைத்து கொண்டிருக்கிறோம்.அழகாகவும், பகட்டாகவும் இருக்கும் உணவால் வயிறு நிறைந்து விடும். ஆனால் ஆயுள் சுருங்கிவிடும். பாரதத்தின் பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்ல வேண்டும்.

ஆரோக்கியத்தில் கவனம்

நீராவியில் வேக வைத்த உணவு, நாட்டு சர்க்கரையால் தயாரித்த இனிப்பு பண்டங்கள் தவிர்க்கப்பட்டு, ஷவர்மா, மோமோஸ், பர்கர், சாண்ட்விச் போன்ற அன்னிய நாட்டு உணவு ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நமது பாரம்பரிய உணவுகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில் உள்ள முப்படை அதிகாரிகளும், குடும்பத்தினரும் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்துகின்றனர். இவர்கள் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாரம்பரிய உணவுகள், நாட்டு சர்க்கரை கொண்டு தயாரிக்கப்பட்ட கோதுமை இனிப்பு பண்டம் உள்ளிட்ட உணவு வகைகளை பிடித்த உணவாக எடுத்து கொள்கின்றனர். வயிறு நிரப்பாமல், நார்சத்து, நீர் சத்து உள்ளிட்ட உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Venkata Raman
ஜன 08, 2024 15:13

ஆரோக்கியமான இந்திய பாரம்பரிய உணவை உண்ணவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதற்காக இவர்கள் சொல்வதுபோல் நம் முன்னோர்கள் 100 வயது வாழவில்லை. நம் சுதந்திர காலகட்டத்தில் சராசரி இந்தியரின் வயது நாற்பதுக்கு குறைவாகவே இருந்தது. மேம்பட்ட சுகாதாரத்தினாலும் புரத சத்துமிக்க உணவினாலும், மருத்துவ வசதிகளாலும், சராசரிவயது தற்போது 70க்கு மேல் ஆகியிருக்கிறது. இது விஞ்ஞானபூர்வமான உண்மை.


Anil
பிப் 29, 2024 09:10

நீங்கள் மெடிக்கல் ரெபெரென்சென்டடிவ் இல்லன்னா மருத்துவராக இருப்பீர், நீங்கள் சொல்வது முற்றிலும் தவறானது


பெரிய ராசு
ஜன 07, 2024 12:24

அப்ப நீங்க மட்டும் புள் மேக்கப் போடுறீங்க பூர சாயம் கழிவு பவுண்டேசன் கண்மய் லிப்ஸ்டிக் .இயற்கைக்கு வர மாடீங்க ...மக்களுக்கு தெரியும் எது நல்லது எது மோசமானதுனு ..போவாய


அஆ
ஜன 03, 2024 11:46

தனி மனித ஒழுக்கம் முதலில் வேண்டும். அதை வெள்ளகாரன் பேகும்பொது எடுத்து சென்றுவிட்டான்.


Sampath Kumar
ஜன 03, 2024 09:51

தமிழர்களின் பாரம்பரிய உணவோ முறையே சாலா சிறந்தது அதை மீது ஏத்துக்க வேண்டியது நமது கடமை


Dharmavaan
ஜன 03, 2024 08:24

பழைய உணவு முறையே சிறந்தது என்று நிரூபணமாகிறது


Dharmavaan
ஜன 03, 2024 08:23

pazhiya


Kasimani Baskaran
ஜன 03, 2024 05:16

இனிப்பான உணவுகளை தவிர்த்தாலேயே பாதி ஆயும் அதிகரிக்கும்.


சமீபத்திய செய்தி