உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்திப்போமா / ரூ.2.50 லட்சம், 30 மொபைல் திருட்டு கேமரா பதிவையும் லவட்டிய கும்பல்

ரூ.2.50 லட்சம், 30 மொபைல் திருட்டு கேமரா பதிவையும் லவட்டிய கும்பல்

தலைவாசல், அடுத்தடுத்து உள்ள, மொபைல் போன், மருந்தகம் உள்பட, 5 கடைகளில், 2.50 லட்சம் ரூபாய், 30 மொபைல் போன்களை, மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அத்துடன், கடைகளில் இருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவு அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகளையும், மர்ம கும்பல் எடுத்துச்சென்றனர்.சேலம் மாவட்டம் தலைவாசலை சேர்ந்தவர் மகாதேவன், 60. மும்முடி பஸ் ஸ்டாப் எதிரே, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையொட்டி உள்ள தனியார் வணிக வளாகத்தில், மொபைல் போன் கடை வைத்துள்ளார். நேற்று காலை, 6:00 மணிக்கு, கடையை திறக்க வந்தபோது, பூட்டு, ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 20 ஆன்ட்ராய்டு, 10 கீ போர்டு போன்கள் என, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் திருடுபோனது தெரிந்தது. அதே வணிக வளாகத்தில் உள்ள செந்தில்குமாரின் அக்ரோ சென்டரில், 2.25 லட்சம் ரூபாய்; அர்ஜூனனின் மருந்தகத்தில், 7,000; குமாரின் ரத்த பரிசோதனை நிலையம், அருகே உள்ள அவரது மருந்தகத்தில் 5,000 உள்பட, 5 கடைகளில், 2.50 லட்சம் ரூபாய், அதுதவிர, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் மொபைல் போன்கள் திருடுபோனது தெரிந்தது.அதேநேரம் மொபைல் போன், மருந்து கடைகளில் இருந்த, 'சிசிடிவி' கேமராவின் பதிவுகள் அடங்கிய, 3 'ஹார்ட் டிஸ்க்'குகளையும், கும்பல் திருடிச்சென்றது. இதனால் திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் தலைவாசல் போலீசார், கடைகளில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, 2 தனிப்படை அமைத்து விசாரணை நடக்கிறது.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'திருடியவர்கள் குறித்து அப்பகுதியில் வேறு, 'சிசிடிவி' கேமரா பதிவுகள் ஏதும் உள்ளதா என, ஆய்வு செய்கிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !