கல்பாக்கத்தில் கரை ஒதுங்கிய மர்ம பொருளால் பரபரப்பு
கல்பாக்கம்: கல்பாக்கம் கடற்கரையில், கப்பலில் பயன்படுத்தும் ரசாயன குழாய் கரை ஒதுங்கி, பரபரப்பு ஏற்பட்டது. கல்பாக்கம் நகரியம், பகிங்ஹாம் கால்வாய் முகத்துவார கடற்கரை பகுதியில், நேற்று காலை 7:00 மணிக்கு, மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி இருந்தது. அங்கு நடைபயிற்சிக்கு சென்றவர்கள் பார்த்து, கல்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் சென்று பார்த்த போது, 1 மீ., நீளம், 6 செ.மீ., விட்டம் கொண்ட ஆ ரஞ்ச் நிற இரும்பு உருளை, அதனுடன் மஞ்சள் நிற இணைப்பு பை என இருந்தது. அமெரிக்க நாட்டு தயாரிப்பு என குறிப்பிடப்பட்டிருந்தது. அதை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். அந்த பொருள், கப்பலில் ரசாயன வாயு நிரப்பி பயன்படுத்தக்கூடியது என தெரிந்தது. இப்பகுதியில் கரை ஒதுங்கியது எப்படி என தொடர்ந்து விசாரிக்கும் போலீசார், அதை அரசு வெடிமருந்து கி டங்கில் ஒப்படைத்ததாக தெரிவித்தனர்.