உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்திப்போமா /  கொளத்துாரில் மக்கள் மறியல்

 கொளத்துாரில் மக்கள் மறியல்

கொளத்துார்: கொளத்துார், பாரத் ராஜிவ்காந்தி நகரில், 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. நீதிமன்ற உத்தரவுப்படி, வருவாய் துறையினர் நேற்று, ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றினர். இந்நிலையில், வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று, செந்தில் நகர் சிக்னல் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியாருக்கு இடத்தை தர முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினர். போலீசார் அவர்களுடன் பேச்சு நடத்தியபின், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !