உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்திப்போமா / அடிப்படை வசதிகளுக்கு ரூ.79 லட்சம் நிதி ஒதுக்கீடு

அடிப்படை வசதிகளுக்கு ரூ.79 லட்சம் நிதி ஒதுக்கீடு

மயிலம் : மயிலம் ஒன்றியத்தில் 79 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., சிவகுமார், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மயிலம் ஒன்றியத்தில் உள்ள கொடிமா, முப்புளி, வீடூர், மயிலம், நெடிமோழியனுார் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு சிமென்ட் சாலை, குடிநீர், மயானப்பாதை உள்ளிட்ட பல்வேறு பணிகளை ரூ. 79 லட்சம் செலவில் செய்வது என்பது உட்பட 29 தீர்மானமானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை சேர்மன் புனிதா ராமஜெயம், கவுன்சிலர்கள் கண்ணன், செல்வகுமார், கீதா, பரிதா, உமா, சாந்தகுமார், நிவேதா, கண்ணன், தனலட்சுமி, செல்வம், அஞ்சலாட்சி, கோமதி, கயல்விழி, சரசு, ராஜ்பரத், ஜெயந்தி, ஜமுனாராணி, வசந்தா, கலா, சுந்தரி பொறியாளர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ