உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / தி.மு.க.,வில் பன்னீர்: ஸ்டாலின் சாதுர்யமா?

தி.மு.க.,வில் பன்னீர்: ஸ்டாலின் சாதுர்யமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஊழல் வழக்கில் சிறைக்கு செல்ல நேரிட்டபோது, உருவான அரசியல் நெருக்கடி காலத்தில் இரு முறையும், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஒரு முறை என, மூன்று முறை குறுகிய காலத்திற்கு முதல்வராக பதவி வகித்தவர், பன்னீர்செல்வம். முதல்வராக பதவி வகிப்பதற்கு முன்னும், பின்னும், ஜெயலலிதாவின் அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த பதவியையும் வகித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அவரது தோழி சசிகலாவால் முதல்வராக்கப்பட்டடாலும், பின், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சசிகலாவுக்கு எதிராக, தர்மயுத்தம் என்ற பெயரில் போராட்டமும் நடத்தினார். ஊழல் வழக்கில், சசிகலா சிறைக்கு சென்றதும், முதல்வராக இருந்த பழனிசாமியுடன் கைகோர்த்து துணை முதல்வரானார். ஆனால், அ.தி.மு.க.,வில் வெடித்த, 'ஒற்றை தலைமை' பிரச்னையால், அந்தக் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு' என்ற அமைப்பை துவக்கி, தனி அணியாக செயல்பட்டு வந்தார். அதேநேரத்தில், அ.தி.மு.க.,வில் மீண்டும் சேருவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார். 'எந்த நிபந்தனையும் இன்றி, கட்சியில் சேர தயாராக இருப்பதாகக் கூறியும், அவரை சேர்த்துக் கொள்ள, அ.தி.மு.க.,வின் பொதுச்செயலரான பழனிசாமி முன்வரவில்லை. இதனால், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் போல, புதிய கட்சியை பன்னீர்செல்வம் துவக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சமீபத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் சேர்ந்தார். பன்னீர்செல்வம் தி.மு.க.,வில் சேர்ந்ததை, சசிகலா, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். கடந்த 2024 லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று, ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வம், 3 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று, இரண்டாம் இடம் பிடித்தார். அதனால், இம்முறையும் அவரை பா.ஜ., மேலிடம் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும் என்று நம்பினார். அந்த நம்பிக்கை பொய்த்து விட்டதால், தற்போது தி.மு.க.,வில் இணைந்துள்ளார். அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றும் கூறுவர். அந்த கூற்றை உண்மையாக்கும் வகையில், பன்னீர்செல்வத்தின் செயல்பாடு அமைந்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், இரண்டாவது முறையாக, அதிக இடங்களை பிடித்து வெற்றி பெற வேண்டும்; மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ள முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.,விற்கு விழக்கூடிய ஓட்டுகள் சிதறி விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். அதனால் தான், தமிழகத்தில் செல்வாக்காக உள்ள முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவரான பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்த்துள்ளார். பன்னீர் வாயிலாக, அவரது சமூகத்தை சேர்ந்த கணிசமான ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு கிடைக்கும் என்பது ஸ்டாலினின் அரசியல் கணக்கு. அதுமட்டுமின்றி, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு, 'செக்' வைக்கும் வகையிலும் சில முடிவுகளை சமீப நாட்களாக ஸ்டாலின் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியே பன்னீரின் இணைப்பு. அத்துடன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், தி.மு.க.,வில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது, தி.மு.க.,வின் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க உதவும் என்பதும், ஸ்டாலினின் நம்பிக்கை. மொத்தத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி கைவிட்ட பன்னீருக்கு, முதல்வர் ஸ்டாலின் கைகொடுத்துள்ளார். இருப்பினும், பன்னீரின் இணைப்பு தி.மு.க.,விற்கு கணிசமான ஓட்டுகளை பெற்றுத் தருமா என்பது தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

MUTHU
மார் 02, 2026 22:08

ஆட்டிற்கு குலையை காட்டினால் போதுமே. பின்னாலே வந்து கொண்டிருக்கும். இதிலே பெரிய சாதுர்யம் என்ன. ஆனால் என்ன அப்புறம் கசாப்பு தான்.


S Srinivasan
மார் 02, 2026 18:47

it is waste, if karunanidhi is there he would have not done this. his calculation fat superior than Stalin tmw udayanidhi will not have any acumanship on all these strategies and dmk will fall in due course of time


venugopal s
மார் 02, 2026 16:57

சீச்சீ , இந்தப் பழம் புளிக்கும் என்று ஓடிப்போன நரியின் நிலை தான் சங்கிகளுக்கு!


சந்திரன்
மார் 02, 2026 15:25

பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம். பழைய பிளாஸ்டிக் பேப்பருக்கு ஈர வெங்காயம்


வில்லிபுத்தூரான்
மார் 02, 2026 15:20

இதில் சாதிரியம் எதுவும் இல்ல.பன்னீர் முதலீசு செய்த நிறுவனம் காசு கொடுக்கல.மேலும் எடப்பாடிய பழி வாங்க பன்ஸ் பன்னீர் அவர்களுக்கு ஒரு களம் தேவை இது தான் விஷயம்.


Anbuselvan
மார் 02, 2026 15:11

திரு பன்னீர்செல்வம் அவர்களுக்கென தனிப்பட்ட முறையில் அவரது தேனீ அல்லது போடி தொகுதியிலேயே வெல்லக்கூடிய அளவுக்கு வாக்கு கிடையாது. மற்ற தொகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் 100 பேர் இருப்பார்கள். பாவம் திமுக.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 02, 2026 13:05

நடிகர் கார்த்திக் மற்றும் மன்சூர் அலி கானின் கட்சி விட்டுப்போச்சு ...... அதையும் சேர்த்திருந்தா 234 என்ன 434 லிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி ....


naranam
மார் 02, 2026 11:24

பன்னீர் ஒரு பயந்தாங்கொள்ளி, பச்சோந்தி.. அதனால் தான் திமுகவுடன் சேர்ந்துவிட்டார். ஜெயலலதாவின் ஆன்மாவிற்கு துரோகம் செய்து விட்டார். தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் பதவி வாங்குவதிலும் பணம் சேர்ப்பதிலுமே குறியாக இருக்கும் இவர் திமுகவுக்கு மிகவும் பொருத்தமானவர் தான்.


Sri Kumaran
மார் 02, 2026 10:28

இவரால் இவர்கள் சமூகத்தின் மீது குற்றச்சாட்டு


SUBBU,MADURAI
மார் 02, 2026 11:40

உண்மை.


ராமகிருஷ்ணன்
மார் 02, 2026 09:33

திமுகவுக்கு அசிங்கம். மானம் கெட்ட கட்சியினருக்கு உரைக்காது. பன்னீர்செல்வத்துக்கு அவமானம், மகாகேவலம் ஈனத்தனமான செயல்.


சமீபத்திய செய்தி