மேலும் செய்திகள்
மூக்கு நுனியில் ஓவியம் வரையும் நாகராஜ்
06-Jul-2025
போதை பொருள் ஒழிப்பு ரங்கோலி ஓவிய போட்டி
09-Jul-2025
கோவை : கோவை பீளமேட்டில் உள்ள, கஸ்துாரி சீனிவாசன் ஆர்ட் காலரியில், ஓவியக் கண்காட்சி நடந்து வருகிறது. இதில் கோவையைச் சேர்ந்த ஓவியர் மதிநிறை செல்வன் வரைந்த, 60க்கும் மேற்பட்ட ஓவியங்கள் அனைவரையும் கவர்கின்றன.இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஓவியங்களை, பள்ளி கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் என, ஏராளமானவர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். காலை, 10:00 மணி முதல் மாலை,5:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.ஓவியர் மதிநிறைச் செல்வனிடம் பேசினோம்..!கோவை பட்டணம்புதுார்தான் எனக்கு சொந்த ஊர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஓவியங்கள் வரைந்து வருகிறேன். எதார்த்த பாணி ஓவியங்கள் மற்றும் மார்டன் ஆர்ட் இரண்டும் வரைகிறேன். வாட்டர் கலர், அக்ரலிக், ஆயில் பெயின்ட் பயன்படுத்தி வரைகிறேன். டிஜிட்டல் மற்றும் கிராபிக் தொழில்நுட்பங்கள் வரவால், பேனர் வரையும் தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓவியக்கலை அழிந்து போக வாய்ப்பு இல்லை. எத்தனை டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வந்தாலும், கையால் வரையும் ஓவியங்களுக்கு இருக்கும் மதிப்பு குறையாது. இந்த கலையை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
06-Jul-2025
09-Jul-2025