உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / வாசிக்க வைத்தார்... வறுமையை வென்றார்!

வாசிக்க வைத்தார்... வறுமையை வென்றார்!

ரயில்வே ஸ்டேஷனில், அதிகாலை 4:00 மணிக்கு, சுகந்தி அக்காவை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். சுடச்சுட வரும் செய்தித்தாள் கட்டுகளை, ஓட்டல், அலுவலகம், வீடுகளுக்கு தனித்தனியாக பிரித்து அடுக்கி கொண்டிருப்பார். அதை டெலிவரி செய்யும் வரை, பம்பரமாய் சுற்றுவார். அன்று ஞாயிறு. நாளிதழ்களை பிரித்து அனுப்பி விட்டு, சூடாக கப் டீ குடித்துக் கொண்டிருந்தவரிடம், மெல்ல பேச்சுக்கொடுத்தேன். ''படித்தது ஒன்பதாம் வகுப்பு. கணவர் செல்வராஜ் பேப்பர் ஏஜென்டாக இருந்தார். ஒருநாள் அதிகாலையில் திடீரென அவருக்கு வந்த மாரடைப்பு, என் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் புரட்டி போட்டது. ஒன்பது வயது மகனோடு நடுவீதிக்கு வந்தேன். பொருளாதார ரீதியாக உதவ யாரும் இல்லை. அவரின் தொழிலையே கையில் எடுத்தேன். அதிகாலை 4:00 மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் வந்து, பேப்பர் கட்டுகளை தனித்தனியாக பிரித்து, டெலிவரி செய்து, பணத்தை வாங்கி கொண்டு வீடு திரும்ப 11:00 மணியாகிவிடும். தனியாக துாங்கும் மகனை வீட்டுக்குள் பூட்டிவிட்டு கிளம்பும் போது, ஒரு தாயாக நான் பட்ட வேதனைகள் ஏராளம். என் வாழ்க்கை ஓட்டத்திற்கு ஏற்ற மாதிரி அவனும் வாழ பழகி கொண்டான். யாரிடமும் கையேந்தி விடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் ஓடினேன். திரும்பி பார்த்தால் 18 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஓய்வு, உறக்கமின்றி, அழுகையும், வெறுமையும் நிறைந்த வாழ்க்கையை சுமந்தேன். காலம் என் கண்ணீருக்கு மருந்தளித்தது. ''எப்படி...?''-ஆர்வமுடன் கேட்டேன். ''கணவர் பிரிந்தபோது நான்காவது படித்த என் மகன், இப்போது இன்ஜினியரிங் முடித்துவிட்டு, ஐடி., கம்பெனியில் வேலைக்கு செல்கிறான். அண்ணாந்து பார்க்கும் உயரத்திற்கு வளர்ந்து விட்டான். நாளிதழ்களை நம்பிய என்னை கடவுள் என்னை கைவிடவில்லை,''. வித்யா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ