உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / திறமையான இளைஞர்களை தேடுகிறது இஸ்ரோ: புரொபல்ஷன் வளாக குழு இயக்குனர் காயத்ரிதேவி பேட்டி

திறமையான இளைஞர்களை தேடுகிறது இஸ்ரோ: புரொபல்ஷன் வளாக குழு இயக்குனர் காயத்ரிதேவி பேட்டி

கோவை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்(இஸ்ரோ) விண்வெளி அறிவியல் மட்டுமின்றி ஏஐ, ஐஓடி, சென்சார்கள், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, சிவில் இன்ஜினியரிங் என அனைத்து துறைகளிலும் திறமையான இளைஞர்கள் தேவைப்படுகின்றனர் என்கிறார் மகேந்திரகிரி, இஸ்ரோ புரொபல்ஷன் வளாக குழு இயக்குனர் காயத்ரிதேவி. இவர் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி: * விண்வெளி ஆய்வு தகவல்களின் அடிப்படையில் தான் செயலிகளையும், திட்டங்களையும் உருவாக்குகிறோமா? ஆம். செயற்கைக்கோள்களில் இருந்து மட்டுமல்லாமல் கிரவுண்ட் ஸ்டேஷன் எனும் தரைக்கட்டுப்பாட்டு மையங்களில் இருந்தும் பெறப்படும் டேட்டாவை (தரவுகளை) ஒருங்கிணைத்தே, இவை செயல்படுத்தப்படுகின்றன. எனினும், பெரும்பாலான பயன்பாடுகளுக்குச் செயற்கைக்கோள் வழியாக பெறப்படும் தகவல்களே பிரதானமாக இருக்கும். * வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா எந்தெந்த விஷயங்களில் முன்னணியில் இருக்கிறது? பேரிடர் மேலாண்மை மற்றும் வேளாண்மையில், நாம் மற்ற நாடுகளை விட, மிக சிறப்பாக செயல்படுகிறோம். இதுதவிர, தொலைதூரக் கல்வி, தொலைதூர மருத்துவம் போன்றவற்றில் செயற்கைக்கோள் பயன்பாடு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. * இஸ்ரோவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றி? இஸ்ரோவில் விண்வெளி அறிவியல் மட்டுமின்றி ஏஐ, ஐஓடி, சென்சார்கள், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, சிவில் இன்ஜினியரிங் என அனைத்து துறைகளிலும் நிறைய வாய்ப்புகளும், ஆராய்ச்சி பணிகளும் உள்ளன. மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்குரிய துறையை தேர்ந்தெடுத்து விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தங்களை அர்ப்பணிக்க முன்வர வேண்டும்.

சாட்டிலைட் தகவல்கள்

பயன்படுவது எங்கே?விவசாயம்நாட்டின் எந்தப் பகுதியில் என்ன வகை மண் உள்ளது, எங்கு என்ன பயிரிடலாம், நிலத்தடி நீர் இருப்பு எவ்வளவு என்பதைத் துல்லியமாக கண்காணித்து திட்டமிட உதவுகிறது. ரிமோட் முறையில் பாசனம், நீர் மேலாண்மை குறித்து, விவசாயிகளுக்கு எளிமையாக வழிகாட்டப்படுகிறது.வானிலை முன்னறிவிப்புஏற்கெனவே உள்ள வானிலை நடைமுறைகளுடன், தற்போதைய 'ரியல் டைம்' செயற்கைக்கோள் டேட்டாவை ஒப்பிட்டு, புயல், மழை அல்லது அசாதாரண மாற்றங்கள் நிகழுமா என்பதை, முன்கூட்டியே கணிக்க முடிகிறது.சுற்றுச்சூழல் பாதுகாப்புநகரங்களில் போக்குவரத்து கட்டுப்பாடு, மக்கள் கூட்ட மேலாண்மை, நீர், மின்சார விநியோக கண்காணிப்பு, சென்சார்கள் மற்றும் ஐஓடி(இன்டர்நெட் ஆப் திங்ஸ்) தொழில்நுட்பத்துடன் இணைந்து காற்று மாசுபாடு, கழிவு மேலாண்மை ஆகியவை துல்லியமாக கண்காணிக்கப்படுகின்றன.அதிவேக இணைய வசதிஅதிவேக இணைய தேவையை நிறைவு செய்ய நானோ, மைக்ரோ செயற்கைக்கோள்கள் மற்றும் புவி தாழ்வட்ட பாதைகளில் நிலைநிறுத்தப்படும் உயர் செயல்திறன் கொண்ட செயற்கைக்கோள்கள் பெரிதும் உதவுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை