உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / விவாகரத்து பெறாமல் ‘லிவ்விங் டுகெதர்’ குற்றம்

விவாகரத்து பெறாமல் ‘லிவ்விங் டுகெதர்’ குற்றம்

கேள்வி: திருமணம் ஆன ஒருவர் விவாகரத்து பெறாமல், சேர்ந்து வாழும் உறவில் (லிவ்விங் டூகெதர்) மூன்றாவது நபருடன் வாழ்வது சட்டப்படி சரியா? ஏற்கனவே திருமணமான, உயிருடன் இருக்கும் துணைவரை கொண்ட ஒருவர், துணைவரிடம் இருந்து விவாகரத்து பெறாமல் மூன்றாவது நபருடன் சேர்ந்து வாழும் உறவில் இருந்தால் அது சட்டப்படி குற்றம். வன்கொடுமை வழக்கில் மனைவிக்கு ஜீவனாம்சம் தராததால் சிவில் சிறையில் தண்டனை அனுபவித்தவர், மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியதில்லையா? ஜீவனாம்சம் செலுத்த தவறியதற்காக சிவில் சிறைக்கு சென்று வருவதன் வாயிலாக, கணவன் செலுத்த வேண்டிய மாதாந்திர ஜீவனாம்ச நிலுவைகளை செலுத்துவதற்கான, சட்டப்பூர்வ பொறுப்பிலிருந்து அவரை விடுவிக்காது என்று, அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. கணவன் சிறைக்கு சென்று வந்தாலும் ஜீவனாம்சம் கொடுத்துதான் ஆகவேண்டும். – வக்கீல் சண்முகம் ரேஸ்கோர்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி