மேலும் செய்திகள்
நாளைய மின் தடை
30-Jul-2025
தி ரைப்பட உலகில், என்றுமே மறக்க முடியாத ஒரு கவிஞர் என்றால் அது கண்ணதாசன் தான். இன்றளவும் அவர் பாடல்கள் தாலாட்டும். பாதை காட்டும். நம்பிக்கை கொடுக்கும். உள்ளத்துக்கு ஒரு மருந்து. இப்படி அவரின் புகழ் பரவக் காரணம், கோவை என்றால், பலருக்கு ஆச்சரியம் இருக்கும். ஆம். அவர் எழுதிய முதல் பாடல், கோவையில் இயற்றியது. இதுகுறித்து, கோவையை சேர்ந்த ரம்யா கூறியதாவது: கடந்த 1949ம் ஆண்டு வெளிவந்த படம், கன்னியின் காதலி'. ஷேக்ஸ்பியரின் நகைக்சுவை நாடகமான பன்னிரெண்டாவது இரவு என்பதை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில், கன்னியின் காதலி திரைப்படம் தயாரிக்கப்பட்டது. கண்ணதாசன், இப்படத்துக்கு தான் தனது முதல் பாடலான கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே' என்ற பாடலை எழுதினார். ஒரு பெண், ஆண் வேடம் அணிந்து கொண்டு தோழிக்கு ஆறுதல் கூறுவதான காட்சிக்கு, பாடல் எழுத வேண்டும் என இயக்குனர் சொல்ல, அப்போதே எழுதிக் கொடுத்துள்ளார் கண்ணதாசன். இதை படித்து விட்டு, இயக்குனர் பாராட்டியுள்ளார். தனக்கு இருந்த மன அழுத்தத்தை இப்பாடல் வாயிலாக, போக்கிகொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
30-Jul-2025