வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஐயா வ.உ .சி இழுத்த செக்கிற்கு இன்னமும் விடுதலை கிடைக்கவில்லை.
வாசகர்கள் வாசிக்க வேண்டிய நுால்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் எழுத்தாளர் ஆ.ரா.வேங்கடாசலபதி, சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை குறித்து எழுதிய, 'Swadeshi Steam' என்ற ஆங்கில நுால் குறித்து, கோவை கேப்பிட்டல் நிறுவனத்தில் தலைவர் பாலசுந்தரம், தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.இந்திய சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளில் மிகவும் உன்னதமானவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை. வ.உ.சி., குறித்து தமிழில் ஏராளமான நுால்கள் எழுதப்பட்டுள்ளன. அவை எல்லாம் அவரது சுதந்திர போராட்ட வாழ்க்கை வரலாறு. ஆ.ரா.வேங்கடாசலபதி எழுதி உள்ள, 'Swadeshi Steam' என்ற இந்த ஆங்கில நுால், தனித்துவமான நுாலாகும். வ.உ.சி., தொழில் முயற்சி பற்றியதாகும்.வழக்கறிஞராக இருந்த வ.உ.சி., அந்த காலகட்டத்தில், எப்படி ஒரு தொழில் முனைவோராக எப்படி உருவானார், கப்பல் ஓட்டும் தொழிலை ஏன் தேர்ந்தெடுத்தார், அதற்காக அவர் எடுத்த முயற்சி, சிரமங்கள் பற்றி மிக நேர்த்தியாக, ஆய்வுபூர்வமாக இந்த நுாலில் எழுதி இருக்கிறார்.அந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் மட்டுமே கப்பல் போக்குவரத்துத் தொழிலை செய்து வந்தனர். அவர்களுக்கு இணையாக இந்த தொழிலில் ஈடுபட இந்தியர்களுக்கு துணிச்சல் இல்லை. அதற்கான பொருளாதாரமும் இந்தியர்களிடம் இல்லை. இருந்தும் இந்தியர்களில் சிலர், ஆங்கிலேயர்களுக்கு இணையாக சில தொழில்களில் ஈடுபட்டனர். வ.உ.சி., யாரும் செய்ய முன் வராத கப்பல் தொழிலில் இறங்கினார். ஆங்கிலேயர்கள் இதை எதிர்பார்க்கவில்லை.இந்தியர் ஒருவர் சுதந்திரமாக கப்பல் இயக்குவது, வெள்ளையர்களுக்கு கவுரவ பிரச்னையாக மாறிவிட்டது. வ.உ.சி., அப்படி ஒன்றும் வசதி படைத்தவர் இல்லை. ஆனால் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையோடு, நிதி திரட்டி, பங்குதாரர்களை உருவாக்கி, தனது சுதேசி கப்பல் கம்பெனியை உருவாக்கி வ.உ.சி., வெற்றி கண்டார்.இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள், வ.உ.சி.,யின் கப்பல் தொழிலை அழிக்க நினைத்தனர். அன்றைய மாகாண கவர்னராக இருந்த ஆர்தர் லாலி, திருநெல்வேலி கலெக்டர் வின்ச் மற்றும் ஆஷ்துரை போன்றவர்கள், வ.உ.சி.,க்கு சொல்ல முடியாத அளவுக்கு தொல்லைகள் கொடுத்தனர்.அதன் விளைவாக, 1906 ல் துவங்கப்பட்ட வ.உ.சி.,யின் சுதேசி நீராவி கப்பல் இரண்டே ஆண்டுகளில் முடக்கப்பட்டது. வ.உ.சி., மேல் தேச துரோக வழக்கு போடப்பட்டு, சிறையில் வைத்தனர். இந்த நுாலில், ஆதாரங்களோடு ஆசிரியர் இதை பதிவு செய்துள்ளார்.'வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் அடி மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்' என பாடிய பாரதியின் கனவை அன்றைக்கே நனவாக்கியவர் வ.உ.சி.இன்றைக்கு நாம் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வது எல்லாம் பெரிய விஷயமல்ல, ஆன்றைக்கு வெள்ளையர்களுக்கு எதிராக வ.உ.சி., எடுத்த தொழில் முயற்சிதான் வியப்புக்குரியது.இந்த நுாலை தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர் அவசியம் படிக்க வேண்டும்.இன்றைக்கு நாம் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வது எல்லாம் பெரிய விஷயமல்ல, ஆன்றைக்கு வெள்ளையர்களுக்கு எதிராக வ.உ.சி., எடுத்த தொழில் முயற்சிதான் வியப்புக்குரியது. இந்த நுாலை தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர்கள் அவசியம் படிக்க வேண்டும்.ஆங்கிலேயர்கள் அதிகம் லாபம் ஈட்டும் தொழில்களில் இந்தியர்களும் ஈடுபட்டு, அவர்களை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தி, அவர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்பதுதான் வ.உ.சி.,யின் நோக்கமாகும். அதற்கான முயற்சிதான் சுதேசி கப்பல் கம்பெனி.
ஐயா வ.உ .சி இழுத்த செக்கிற்கு இன்னமும் விடுதலை கிடைக்கவில்லை.