உள்ளூர் செய்திகள்

கெய்ரோவில் ஆட்டோ உதிரி பாகங்கள் வர்த்தக கண்காட்சி

கெய்ரோ: எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் உள்ள எக்ஸ்போ சென்டரில் ஆட்டோ உதிரி பாகங்கள் தொடர்பான வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. இந்த வர்த்தக கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த ஆட்டோ உதிரி பாக தயாரிப்பு நிறுவனங்கள் பல பங்கேற்றன. இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள இந்திய அரங்கை தூதரக அதிகாரி சுஷ்மா தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பல பங்கேற்றன. இதன் மூலம் இந்தியாவுக்கு ஆட்டோ உதிரி பாகங்கள் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்