உள்ளூர் செய்திகள்

கானா நாட்டில் குடும்ப கேளிக்கை நாள்

மேற்கு ஆப்பிரிக்காவில் கானாவில் உள்ள கானா தமிழ் சங்கத்தின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை (12/05/2024) அன்று வெகு விமர்சியாக குடும்ப கேளிக்கை நாள் (Family Fun Day), தமிழ் புத்தாண்டு மற்றும் அன்னையர் தினமும் கொண்டாடும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது, அதில் தலைவர் மோகன், உப தலைவர் சதீஷ், செயலாளர் ஆனந்தன் மற்றும் சங்க உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள், இதில் கானாவில் உள்ள ஆக்ரா மற்றும் தெமாவில் வாழும் தமிழ் குடும்பங்கள் எல்லோரும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது, இதில் மதியம் அறுசுவை விருந்தும் நடைபெற்றது, அத்துடன் அன்னையர் தினத்தை அங்கு உள்ள குடும்பத் தலைவிகள் எல்லோரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்கள். - தினமலர் வாசகர் ஆ.ஞானபண்டிதன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்