உள்ளூர் செய்திகள்

மொம்பாசா தமிழ் சங்க ஏற்பாட்டில், 4 பண்டிகைகளின் ஒருமித்த கொண்டாட்டம்

கென்யா: மொம்பாசா தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில், கடந்த ஞாயிறு காலை 10 மணிக்கு, நான்கு பண்டிகைகளின் ஒருமித்த கொண்டாட்டமாக ஒரு சிறப்பான விழா நடைபெற்றது நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கி, சங்கத் தலைவர் சுப்ரமணியனின் உற்சாக வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னர், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, மீலாது நபி மற்றும் இனிப்புடன் தித்திக்கும் தை திருநாள் பொங்கல் போன்ற பண்டிகைகள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன. தமிழ் கலாச்சாரத்தின் தனித்தன்மை மற்றும் அதன் ஒற்றுமையை மக்களுக்கு காண்பிக்கும் விதமாக, அனைத்து தமிழ் மற்றும் இந்திய நண்பர்கள் தங்களது குடும்ப நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை உற்சாகப்படுத்தினர். இந்த நிகழ்வின் மூலம் சமுதாய ஒற்றுமையின் அருமையும், அன்பும் மகிழ்ச்சியையும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. அனைவருக்கும் தெனிந்திய உணவு சிறப்பாக வழங்கப்பட்டதால், விழா மேலும் சிறப்பு பெற்றது. இந்த விழாவை ஒருங்கிணைக்க, அனைத்து தமிழ் மக்களும் நேர்த்தியான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர், இந்த நிகழ்வு அனைவருக்கும் என்றும் நினைவில் நிற்கும் வகையில் அமைந்தது - தினமலர் வாசகி தீப குமரகுரு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்