உள்ளூர் செய்திகள்

சாம்பியா தமிழ் கலை மற்றும் கலாச்சார மன்ற கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விழா

சாம்பியா தமிழ் கலை மற்றும் கலாச்சார மன்றத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் சாம்பியாவின் தலைநகரான லூசாகாவில் உள்ள ஹிந்து அரங்கத்தில் சிறப்பாக நடந்தது. தித்திக்கும் பொங்கல் என்னும் தலைப்பில் கோல போட்டிகளும் ஓவிய போட்டிகளும் நடத்தி தேர்வானவர்களுக்கு பரிசுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் சார்பாக சிறப்பு நிகழ்ச்சிகளும் நடந்தது. லூசாகாவில் உள்ள மாற்று திறனாளிகள் சங்கத்துக்கு ஊன்றுகோல்கள் வழங்கப்பட்டது. பொதுக்குழு நிகழ்வில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க பட்டனர். நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவர்க்கும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.- நமது செய்தியாளர் நெளஃபல் ஃபக்ருதீன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்