பிரான்ஸில் விநாயகர் சதுர்த்தி
பிரான்ஸ், கிரிஞியில் உள்ள சனாதன தர்ம பக்த சபை சார்பில் சனிக்கிழமை 7 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பூஜையை முன்னிட்டு காலை 9 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை கணபதி ஹோமம், அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பஜனை, பிற்பகலில் சுவாமி வீதி உலா, சிதறுகாய் உடைத்தல் மற்றும் நாம சங்கீர்த்தனம் நடைபெறும். வருகின்ற பக்தர்களுக்கு அறுசுவை பிரசாதம்(இரவு) அளிக்கப்படும். - நமது செய்தியாளர் ஹரேராம் தியாகராஜன்