பிரான்சில் பன்னிரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு
பிரான்சு நாட்டில் இரண்டாவது முறையாகப் பன்னிரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறவுள்ளது. பாரீசில் 1970 ஆம் ஆண்டு மூன்றாவது மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வருகின்ற 2025 ஆம் ஆண்டு 20/21 மாதம் 12 வது உலகத் தமிழாராய்ச்சி நடைபெறவுள்ளது. பன்னாட்டுத் தமிழ் அறிஞர்கள், புனைகதையாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், இசைவாணர்கள் கலந்து கொள்ளும் இருநாள் கருத்தரங்கம், தமிழின் சங்கஇலக்கியம், தற்காலக் கவிதை, தற்காலப் புனைகதை, புதுஎழுத்து, மொழி பெயர்ப்பு, தமிழ்மொழி வளர்ச்சிக்கு உகந்த கருத்தரங்கங்கள் இந்த மாநாட்டில் நடைபெறும். கருப்பொருள்: தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தமிழ் இலக்கியத்தின் பயன்பாடுகள் (அன்றும், இன்றும்) குறித்த கட்டுரைகள். அனைவரும் வாரீர்!!கோவிந்தசாமி செயராமன், பொதுச் செயலாளர்