உள்ளூர் செய்திகள்

அல் அசா தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும் விழா

அல் அசா தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும் விழாவில் ( பொங்கல், திருவள்ளுவர் நாள்/உழவர் திருநாள் மற்றும் அயலக தமிழர் தினம்) முற்றிலும் தமிழர் பாரம்பரியத்தினை போற்றிடும் விதமாக, சுமார் 300க்கும் மேற்பட்டோரின் பங்கேற்புடன் பொங்கல் வைத்தல், உறியடி மற்றும் சிலம்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் முக்கியமாக இடம்பெற்றன. பாரம்பரிய உணவுகளான மதுரை மேலூர் -சோழா உணவகத்தின் சிறப்பு உணவுகளும் பரிமாறப்பட்டு வெகு சிறப்பாக நடைபெற்றது . விழாவை சிறப்பிக்கும் விதமாக பெண்களுக்கான முக அழகு போட்டி, குழந்தைகளுக்கான ஓவியம் வரைதல் மற்றும் பேச்சு போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. கூடுதலாக, நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் கலாச்சாரத்தினை இளம் தலைமுறையினராலும் மெருகூட்டியது. விழாவில் சிறப்பு அம்சங்களாக சவூதி அரேபியா திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இலச்சினை வெளியீட்டு நிகழ்வு இந்த இலச்சினையை சபாநாயகம் (அல் பரகாஷ் நிறுவனத்தின் பொது மேலாளர்) வெளியிட்டார். பாரூக்-TANSWA ஷிபா மருத்துவமனையின் இலவச மருத்துவ முகாம் இடம்பெற்றிருந்தது . இவ்விழாவினை சிறப்பாக ஒருங்கிணைக்க அல் அசா தமிழ்சங்க நிர்வாகிகள் ரமேஷ் ராஜ்-சூரியபிரபா, அசோக் பிரசன்னா-மஞ்சுளா, சுரேஷ்-மான்விழி, சக்திவேல்-ஸ்ரீமதி, செந்தில் வடிவேல்-ஸ்ரீதேவி, வைஷ்ணவி-நரேஷ், பவானி-ரமேஷ், அனிஷ் ஆகியோர் முக்கிய பங்களிப்பை வழங்கினார்கள். அனைவரின் ஒத்துழைப்பும், சவுதி அரேபியா தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் திறம்பட திட்டமிடலும் விழாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. - நமது செய்தியாளர் காஜா மைதீன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !