இரத்ததான முகாம்
சவுதி அரேபியாவின் அல்கசீம் மண்டலம் - புரைதாவில், 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் சார்பில், DaMy Blood Bank Friends Charity இல் 15ஆகஸ்ட் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.இம்முகாம் மண்டலத் தலைவர் மங்களக்குடி முகைதீன் தலைமையிலும், மண்டல மருத்துவர் அணி செயலாளர் மதுரை Dr. ஆண்டோ விளாடிமிர் ஒருங்கிணைப்பிலும், IWF நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மேற்பார்வையிலும் நடைபெற்றது.நூற்றுக்கு மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். குறிப்பாக மகளிர் பிரிவும் சிறப்பாக பங்கேற்று தங்களின் சேவையை வழங்கினர்.இந்த முகாமை சிறப்பாகச் செய்த அனைவருக்கும், இரத்ததானம் வழங்கிய நல் உள்ளங்களுக்கும், இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளது. தகவல்: ஆரிப் அப்துல் சலாம்.