உள்ளூர் செய்திகள்

துபாயில் நூல் வெளியீட்டு விழா

துபாய்: துபாய் தர்பார் மீடியா நடத்திய கவிஞர் இதயா எழுதிய அகர மலர்கள் புத்தக வெளியிடு விழா துபாய் அல் கிசஸ் அன்வர் பிசினஸ் சென்டரில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கால்டுவெல், அமீரக இந்திய நலவாழ்வு பேரவையின் துணைத் தலைவர் ஏ.எஸ் இப்ராஹிம்,தமிழ்மாறன் ஆகியோர் நூல் குறித்து சிறப்புரையாற்றினர். புத்தகத்தை நத்தம் ஜாஹிர் உசேன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்துல்லாஹ் , முகம்மது கபீர் , முஹைதீன் அப்துல் காதர் ,சமூக ஆர்வலர் முஹம்மது ராசிக், பரங்கிபேட்டை ஜமால் மரைக்காயர் , திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் செயலாளர் மன்னர் மன்னன் , நசீர் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர் . நிகழ்ச்சியை பொறியாளர் கீதாஞ்சலி தொகுத்து வழங்க துபாய் தர்பார் குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !