உள்ளூர் செய்திகள்

குவைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் குழந்தைகள் தின விழா

குவைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 'குழந்தைகள் தின விழா' சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க சங்க குழந்தைகளுக்காக, சங்க குழந்தைகளால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி. ஓவியம், சதுரங்கம், மென்பந்து, நெருப்பில்லா சமையல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம்/சான்றிதழ் வழங்கப்பட்டது. குழந்தைகளின் ஆடல், பாடல், இசைக்கருவி இசைத்தல், திருக்குறள் ஒப்புவித்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. கலந்துகொண்ட குழந்தைகள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. சரவண பவன் சுவையான இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது . - தினமலர் வாசகர் யாதவமூர்த்தி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !