உள்ளூர் செய்திகள்

துபாயில் டிவைன் பிளாக் மஜ்லிஸ் மார்க்க விளக்க மீலாது சொற்பொழிவு நிகழ்ச்சி

துபாய் : துபாயில் டிவைன் பிளாக் மஜ்லிஸ் மார்க்க விளக்க மீலாது சிறப்பு 51 வது இணையவழி சொற்பொழிவு நிகழ்ச்சி செப்., 21 (ஞாயிற்றுக்கிழமை) அமீரக நேரப்படி காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை நடக்கிறது.“உலகை வியக்க வைத்த உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்”என்ற தலைப்பில் மேலப்பாளையம், உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லானா மவ்லவி அல் ஹாஃபிழ் ஷேக்குத் தரிக்கத் ஆலிம் ஹைதர் அலி மிஸ்பாஹி ஹஸரத், சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூஃப் தலைமையிலான குழுவினர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். --- துபாயில் இருந்து நமது தினமலர் நிருபர் காஹிலா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !