அபுதாபி கோவிலில் இலவச கண் மருத்துவ பரிசோதனை
அபுதாபி கோவிலில் இலவச கண் மருத்துவ பரிசோதனை அபுதாபி: அபுதாபியில் உள்ள பி.ஏ.பி.எஸ் ஹிந்து கோவிலில் இலவச கண் பரிசோதனை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு கண் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு கண் பரிசோதனைகளை மேற்கொண்டனர். மேலும் கண்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினையும் வழங்கினர். இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர். -- அபுதாபியில் இருந்து தினமலர் வாசகர் பாலா