பக்ரைனில் இலவச மருத்துவ முகாம்
மனாமா: பஹ்ரைனில் உள்ள வணிக வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது இந்த முகாமில் மருத்துவர்கள் பங்கேற்ற பொது மக்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர் குறிப்பாக தமிழக சமூக ஆர்வலர் சையது ஹனீப் உள்ளிட்ட குழுவினர்கள் முகாமில் பங்கேற்று பயனடைந்தனர் முகாமை தமிழக ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் பார்வையிட்டு மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். - நமது செய்தியாளர் காஹிலா