மஸ்கட் இந்திய பள்ளிக்கூடத்தில் சுதந்திர தின விழா
மஸ்கட் : ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் உள்ள அல் குப்ரா இந்திய பள்ளிக்கூடத்தில் இந்தியாவின் 79வது சுதந்திர தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.பள்ளிக்கூட நிர்வாகக்குழு உறுப்பினர் சுமையா கலில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.--- நமது செய்தியாளர் காஹிலா.