உள்ளூர் செய்திகள்

மினாவில் இந்திய யாத்ரீகர்கள் அலுவலகத்தை ஆய்வு செய்த இந்திய தூதர்

ஜெத்தா : சௌதி அரேபியாவின் மினாவில் இந்திய யாத்ரீகர்கள் அலுவலகத்தை ஆய்வு செய்த இந்திய தூதர் டாக்டர் சுகேல் அஜாஸ் கான் நேரில் ஆய்வு செய்தார். புனித ஹஜ் கிரியை பொதுமக்களுடன் நிறைவேற்றிய இந்திய தூதர் மினாவில் இந்தியாவைச் சேர்ந்த ஹஜ் யாத்ரீகர்களுக்கு தேவையான பணிகளை மேற்கொண்டு வரும் அலுவலகத்துக்கு வந்து பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டார். அப்போது ஜெத்தா இந்திய துணை தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.18 ஆம் தேதி வரை மினா பகுதியில் ஹஜ் பயணிகள் முகாமிட்டிருப்பர். இந்திய தூதரை சந்தித்த ஹஜ் பயணிகள் யாத்ரீகர்கள் அலுவலகம் மருத்துவம் உள்ளிட்ட அவசிய உதவிகளை சிறப்பாக வழங்கி வருவதாக கூறினர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !