ஏமன் நாட்டில் இந்திய சமூகத்தினருடன் இந்திய தூதர் சந்திப்பு
ஏடன் : ஏமன் நாட்டின் ஏடன் நகரில் உள்ள மஹாத்மா காந்தி பள்ளிக்கூடத்தில் இந்திய தூதர் டாக்டர் சுகெல் கான் இந்திய சமூகத்தினரை சந்தித்து பேசினார். இந்த பள்ளிக்கூடம் கடந்த 1931 ஆம் ஆண்டு ஏடன் நகருக்கு மஹாத்மா காந்தி வந்தததை நினைவு கூறும் வகையில் இந்திய அரசின் ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்டது. அங்குள்ள மஹாத்மா காந்தியின் சிலைக்கு இந்திய தூதர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் மரக்கன்று ஒன்றையும் நட்டார். அப்போது பேசிய தூதர், இந்திய சமூகத்தினருக்கு தேவையான தூதரக சேவைகள் அனைத்தும் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றார். - நமது செய்தியாளர் காஹிலா