துபாய் தொழிலாளர் முகாம் இஃப்தாரில் இந்திய துணை தூதர்
துபாய் : துபாய் ஜெபல் அலி பகுதியில் உள்ள தொழிலாளர் முகாமில் இந்திய துணை தூதர் சதீஷ் குமார் சிவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தொழிலாளர் நிதி தொடர்பான பாதிப்புகளுக்கு ஆளாகாத வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் இலவச மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதில் தொழிலாளர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்திய துணை தூதரக அதிகாரி தது மமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.- நமது செய்தியாளர் காஹிலா