சௌதி அரேபியாவில் இந்திய தூதரக சேவை
ரியாத் : சௌதி அரேபியாவின் ஜூபைல், அல் கோபர் மற்றும் புரைதா உள்ளிட்ட பகுதிகளில் ரியாத் இந்திய தூதரகத்தின் சார்பில் தூதரக சேவை வழங்கப்பட்டது. இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி பாஸ்போர்ட் புதுப்பித்தல், அட்டஸ்டேசன் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பெற்றுக் கொண்டனர். இந்திய தூதரக அதிகாரிகள் இந்த பணியை சிறப்புடன் மேற்கொண்டனர்.- நமது செய்தியாளர் காஹிலா