ஏமன் பள்ளிக்கூடத்தில் இந்திய கலாச்சார நிகழ்ச்
ஏமன் பள்ளிக்கூடத்தில் இந்திய கலாச்சார நிகழ்ச்சிஏடன் : ஏடன் (Aden) மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் அமைந்துள்ள முக்கிய துறைமுக நகரம்.இங்கு இந்திய அரசின் ஒத்துழைப்புடன் மகாத்மா காந்தி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளிக்கூடத்தில் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியில் சௌதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அபு மத்தீன், ரிஷி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களுக்கு பள்ளிக்கூட நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்திய அரசின் ஒத்துழைப்புக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.அதனையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.---ஏமனில் இருந்து நமது செய்தியாளர் காஹிலா