துபாயில் இந்திய சுதந்திரதின கலாசார விழா
துபாய் : துபாய் இந்திய துணைத் தூதரகம், எப்.ஓ.ஐ. ஈவெண்ட் சார்பில் இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய கலாச்சார திருவிழா நடந்தது. இந்த விழாவை இந்திய துணைத்தூதரக அதிகாரி பபித்ரா மஜும்தார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் கலாச்சாரநிகழ்ச்சி நடந்தது. இதில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.- நமது செய்தியாளர், காஹிலா.