குவைத்தில் இந்திய சுதந்திர தின விழா
குவைத்: குவைத் இந்திய தூதரகத்தில் இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா வழக்கமான உற்சகாத்துடன் கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் இந்திய குடியரசுத்தலைவரின் சுதந்திர தின உரையை வாசித்தார். இந்தியாவின் தேசிய கொடியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் பலரும் மூவர்ண கொடியை கையில் ஏந்தி மகிழ்ச்சியடைந்தனர். இந்திய தூதரக அதிகாரிகள், இந்திய சமூகத்தினர் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் விழாவில் பங்கேற்றனர். - நமது செய்தியாளர் காஹிலா