உள்ளூர் செய்திகள்

துபாயில் இந்திய மாம்பழ திருவிழா

துபாய் :துபாய் லூலூ ஹைப்பர் மார்க்கெட்டில் இந்திய மாம்பழ திருவிழா நடந்தது. இந்த திருவிழாவை இந்திய கன்சல் ஜெனரல் சதீஷ்குமார் சிவன் தொடங்கி வைத்தார் இந்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் ஒத்துழைப்புடன் இந்த விழா நடந்தது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாம்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.-- நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்