பெய்ரூட்டில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி
பெய்ரூட் : லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் உள்ள அய்ன் சாதே பகுதியில் அமெரிக்க தூதரக கட்டுமானப் பணியில் இந்திய தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். இந்த பகுதியில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் நூர் ரஹ்மான் தலைமை தாங்கினார். அவர் யோகாவின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார். முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். தொழிலாளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர். - நமது செய்தியாளர் காஹிலா