ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் — அறிவின் ஒளி கதையை வரவேற்கும் அறிவு மேடை விழா
ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் — அறிவின் ஒளி கதையை வரவேற்கும் 'அறிவு மேடை' விழா ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம், ஞானமும் பெருமையும் பொங்கும் “அறிவு மேடை” எனும் அறிவொளி பரவலின் அரங்கத்தை டிசம்பர் 6, சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு, ஜெத்தா மதீனா ரோடு, ஷரஃபியாவில் அமைந்துள்ள அழகிய கரம் அல் பலத் விருந்தினர் மாளிகையில் கொண்டாட இருக்கிறார்கள் .மாலை நேரத்தின் ஒளிகள் மெதுவாக மலர்ந்திடும் வேளையில், வளைகுடா நாடுகளில் தமிழருக்காக நீண்ட காலமாக சேவையின் தீபத்தை தாங்கி வந்த சிறப்பு விருந்தினர்கள் இந்த மேம்பட்ட கூட்டத்தைக் கௌரவிக்க வருகிறார்கள். அந்த வரிசையில் UIC நிறுவனத்தின் CEO & Managing Director திரு. பத்ருதீன் அப்துல் மஜீத் மற்றும் S.T. Courier & Cargo நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் கே. அன்சாரி — தங்களின் அரிய சேவையால் எண்ணற்ற தமிழர்களுக்கு உதவியவர்கள்.இன்னும் விழா சிறக்க, தமிழறிவு பேச்சின் வல்லுநர் திரு. செந்தில் வேல் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிறந்த வழக்கறிஞர், முன்னணி தலைவருமான . எம். என். அஹ்மத் சாஹிப் ஆகியோர் தங்கள் சிந்தனையைத் தூண்டும், உணர்வை எழுப்பும், விழிப்புணர்வை பரப்பும் சொற்களால் அரங்கத்தை அலங்கரிக்க இருக்கிறார்கள்.. செந்தில் வேல் தனது கருவூலத்தில் கணிசமான திறமைகளை தாங்கி வரும் ஆளுமை — வேகமான சிந்தனை, கூர்மையான பகுப்பாய்வு, அரசியல் வரலாறு, ஆட்சி மற்றும் சமூக பிரச்சினைகள் பற்றிய ஆழமான புரிதல், அச்சமின்றியும் மரியாதையுடனும் கூடிய விவாத முறை, மேலும் கேட்பவர்களை உடனே ஈர்க்கும் கட்டுப்பாட்டு தமிழ் பேச்சுத்திறன் ஆகியவற்றின் சொந்தக்காரர் இன்று ஜெத்தா விமான நிலையம் வந்தபோது முத்தமிழ் சங்கத்தின் நிர்வாகத்தினர் அன்போடு வரவேற்று கௌரவித்தனர். - ஜெத்தாவில் இருந்து நமது செய்தியாளர் எம்.சிராஜ்